செங்கை மாவட்டத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தல் பணிகளைகண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி மறைமலை நகர் நகராட்சிக்கு ஊரக வளர்ச்சித் துறையின் உதவி திட்ட இயக்குநர் கே.சுப்புலட்சுமி, மதுராந்தகம் நகராட்சிக்கு ஊரக புத்தக திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகரன் ராஜ்குமார், செங்கல்பட்டு நகராட்சிக்கு தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் டி.தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு கால்நடை பராமரிப்பு துறை காஞ்சி மண்டல இணைஇயக்குநர் ஜெயந்தி, இடைக்கழிநாடு - செங்கல்பட்டு மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் டி.சாந்தா செலிங் மேரி, கருங்குழி - செங்கல்பட்டு வேளாண்மை பொறியியல் துறை நிர்வாக பொறியாளர் பி.சந்திரன், மாமல்லபுரம் - ஆட்சியரின் தனி உதவியாளர் (வேளாண் துறை) எம்.தியாகராஜன், திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலைதுறை கூடுதல் கோட்ட பொறியாளர் ஏ.சந்திரசேகரன், திருப்போரூர் - செங்கல்பட்டு மாவட்ட வேளாண்சந்தையின் துணை இயக்குநர் எஸ். ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.