Regional02

தந்தை பெரியார் விருதுக்கு : விண்ணப்பம் வரவேற்பு :

செய்திப்பிரிவு

தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்ய சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான (2021) விருது வழங்க விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் தொடர்பான விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களை ஆட்சியருக்கு வரும் 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT