அரியலூரை அடுத்த புதுப் பாளையம் காலனித் தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் முனியமுத்து(55). விவசாயி. இவர், தனது மகள் மகாரா ணியை அழைத்துக் கொண்டு, நேற்று அரியலூருக்கு இருசக் கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அஸ்தினாபுரம் அருகே சென்ற போது பின்னால் சுண்ணாம் புக்கல் ஏற்றி வந்த லாரி, முனிய முத்து சென்ற இருசக்கர வாக னத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த முனியமுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரிகள் வேகமாக செல்வ தால் அடிக்கடி விபத்துகள் நேரிட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனக்கூறி, அதை கண்டித்து கிராம மக்கள் அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர்.
தகவலறிந்து வந்த கயர்லாபாத் போலீஸார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. .