மேட்டூர் அணையில் நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 120.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 63,922 கன அடி வீதம் நீர்வரத்து இருந்த நிலை யில், அணையில் இருந்து விநாடிக்கு 63,180 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் முக்கொம்பை வந்தடைந்து, அங்கிருந்து பிரிந்து வெளி யேற்றப்படுகிறது.
அதன்படி, நேற்று முன் தினம் முக்கொம்பில் காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 9,949 கன அடி வீதமும், கொள் ளிடம் தெற்கு மேலணையில் இருந்து விநாடிக்கு 51,934 கன அடி வீதமும், வடக்கு மேலணையில் இருந்து விநாடிக்கு 11,613 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டது.
கொள்ளிடம் வடக்கு மேலணையில் இருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்ட நிலையில், வடக்குக் கரையில் கான்கிரீட் சுவர் கட்டும் பணி நிறைவடையாமல் இருந் ததால், வடக்குக் கரையில் உடைப்பு நேரிடும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ சுட்டிக்காட்டிய நிலையில், கரையில் உடைப்பு நேரிடாது என்றும், உடைப்பு நேரிட்டால் நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் பொதுப்பணித் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முக்கொம்பு கொள்ளிடம் வடக்கு மேல ணை யில் திறக்கப்படும் நீரின் அளவு நேற்று கணிசமாக குறைக்கப்பட்டது. முக்கொம் பில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 18,940 கன அடி வீதமும், கொள்ளி டம் தெற்கு மேலணையில் விநாடிக்கு 44,342 கனஅடி வீதமும், வடக்கு மேலணையில் விநாடிக்கு 6,369 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டுள்ளது.