தி.மலை அடுத்த காட்டாம்பூண்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் நாற்றாங்கால் கூட்டுப்பண்ணை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் பிரவீன். அருகில், ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்டோர். 
Regional01

திருவண்ணாமலை மாவட்டத்தில் - ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் ஆய்வு :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார்.

ஆரணி ஒன்றியம் அரியபாடி ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தில் கீழ் ரூ.2.68 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணி, மேற்கு ஆரணி ஒன்றியம் காட்டுக்காநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் காடு வளர்ப்பு, பண்ணை குட்டை அமைத்தல், உறிஞ்சி குழி அமைத்தல் ஆகிய பணிகள், வெண்மணி ஊராட்சியில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், ஜல் ஜீவன் திட்டப் பணிகள், கலசப்பாக்கம் ஒன்றியம் சிறுவள்ளூர் ஊராட்சியில் பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள பணிகள், தி.மலை ஒன்றியம் காட்டாம்பூண்டி ஊராட்சி யில் நாற்றங்கால் கூட்டு பண்ணை பணிகள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு பணிகளை இயக்குநர் பிரவீன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வளர்ச்சி பணிகள் குறித்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர் களுடன் ஆய்வு செய்தார். இக்கூட் டத்தில் ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT