வேளாண் பொறியியல் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு டிரக்குடன் கூடிய தேங்காய் பறிக்கும் கருவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 50 அடி உயரம் உள்ள மரங்களில் இருந்து தேங்காய் பறிக்கவும் மற்றும் தென்னை மரத்தை பராமரிக்க பயன்படுத்தலாம். நான்கு திசைகளிலும் சுழன்று இயங்கும். ஒரு மணி நேரத்துக்கு டீசல் உட்பட வாடகை தொகை ரூ.650 ஆகும். தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.