திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் ஆண் உடல் கிடப்பதாக திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு பொது மக்கள் நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் அங்கு சென்று கழிவுநீர் கால்வாயில் கிடந்த உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பத்துார் அடுத்த புதுப்பேட்டை மெயின் ரோடு 3-வது தெருவைச் சேர்ந்த வெங்கடேசன்(50) என்பதும், இவர் திருப்பத்துார் நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.மேலும், அவர் மதுபோதையில் திருப்பத்தூரில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாயில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்து கிடந்தார்.