போளூர் அருகே கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்ட அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
Regional02

கனமழையால் பாதிக்கப்பட்ட - விவசாயிகளுக்கு போளூர் எம்எல்ஏ ஆறுதல் :

செய்திப்பிரிவு

போளூர் அருகே கனமழை யால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு, விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெலாசூர், எம்மிய மங்கலம், சோத்து கண்ணி, அல்லியமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள், கனமழை காரணமாக நீரில் மூழ்கின. இப்பகுதிகளை, எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு விவசாயி களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், நகரச் செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலாளர்கள் ராகவன், தர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், அல்லிபாபு, சிவமூர்த்தி, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் தரணிதரன் உள் ளிட்டோர் உடனிருந்தனர். 

SCROLL FOR NEXT