Editorial

நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான மையங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை அடையாறு, இன்று ஆய்வுலகின் மையமாகத் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்கிறது

செய்திப்பிரிவு

நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கியமான மையங்களில் ஒன்றாக விளங்கிய சென்னை அடையாறு, இன்று ஆய்வுலகின் மையமாகத் தன் வரலாற்றுப் பயணத்தைத் தொடர்கிறது. தேசிய அளவில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்)1969-ல் நிறுவப்பட்டது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து நிறுவப்பட்டது, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (எம்ஐடிஎஸ்). தற்போது நாட்டிலுள்ள 24 ஐசிஎஸ்எஸ்ஆர் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகச் செயல்பட்டுவருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் தேசியத் திட்டக் குழுக்கள், பல்வேறு மாநிலங்களின் திட்டக் குழுக்களில் இந்நிறுவனத்தின் பேராசிரியர்கள் பங்களித்துவருகிறார்கள். அத்துடன் மத்திய, மாநில அரசுகளுக்கான பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வு அறிக்கைகளை எம்ஐடிஎஸ் தயாரித்து வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கால்பதிக்கும் புகழ்பெற்ற வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் உரை நிகழ்த்தும், விவாதிக்கும் இடமாக எம்ஐடிஎஸ் இன்றைக்கும் திகழ்கிறது. எம்ஐடிஎஸ் நிறுவனர் மால்கம் ஆதிசேசய்யாவின் நினைவு நாளான இன்று அவரை நினைவுகூர்வதுடன், பொன் விழா தருணத்தில் எம்ஐடிஎஸ்ஸின் சிறப்புகளைக் குறித்த ஒரு தொகுப்பு:

SCROLL FOR NEXT