திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட தாராபுரம்-உடுமலை செல்லும் சாலை அருகே உள்ள புளியந்தோட்டம் என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அலங்கியம் போலீஸார் நடத்திய விசாரணையில், கொலைசெய்யப்பட்ட நபர் விருதுநகரைச் சேர்ந்த விக்னேஷ் (23) என்பதும், விருதுநகர் கிழக்குகாவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.
கொலை வழக்கு தொடர் பாக அலங்கியம் போலீஸார் வழக்கு பதிந்து, 13 பேரை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
இவர்களில், மணிகண்டன்(23), பாஸ்கர் (35), குருசங்கர் (36), ரமேஷ் (33), செல்வம் (29) ஆகி யோர் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் ஆட்சியர்சு.வினீத் ஆணை பிறப்பித்தார். அதன்படி, கோவை மத்திய சிறையில் உள்ள 5 பேரிடமும் இதற்கானஆணையை அலங்கியம் போலீஸார் நேற்று வழங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.