Regional01

திமுக எம்எல்ஏ அலுவலகத்தில் மாநகராட்சி தேர்தல் விருப்ப மனு : மதுரை ஆட்சியரிடம் பாஜகவினர் புகார்

செய்திப்பிரிவு

மதுரையில் எம்எல்ஏ அலுவலகத்தை தவறாக பயன்படுத்துவதாக திமுக எம்எல்ஏ கோ.தளபதி மீது மாவட்ட ஆட்சியரிடம் பாஜக தலைவர் புகார் அளித்தார்.

இதுகுறித்து மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் பா.சரவணன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகரிடம் அளித்துள்ள புகார் மனு:

மதுரை வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி வெளி யிட்ட அறிக்கையில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் நவ.22 முதல் எம்எல்ஏ அலுவலகத்தில் மனுக்களை பெறலாம். எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தேர்தல் விதிக்கு எதிரானது. எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, நவ. 22 முதல் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினருக்கான விருப்ப மனுக்கள் காக்காதோப்பு தெருவில் உள்ள திமுக அலுவலகத்தில் வழங்கப்படும் என கோ.தளபதி அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT