சிப்பிப்பாறை பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் பலியான வழக்கில் ஆலை உரிமை யாளரின் மனைவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிப்பிப்பாறை ராஜம்மாள் பட்டாசு ஆலையில் 20.3.2020-ல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதான ஆலை உரிமை யாளரின் மனைவி செல்வி, ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கர் பிறப்பித்த உத்தரவு: கடந்த அக்.22 முதல் மனுதாரர் நீதிமன்றக் காவலில் உள் ளார். குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இவர் மீது வேறு வழக்குகள் இல்லை. எனவே இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.