Regional01

ஆஸ்டின்பட்டியில் புதிய காவல் நிலையம் திறப்பு :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டியில் புதிய காவல் நிலையத்தை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றினார்.

ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.78 லட்சம் நிதி ஒதுக்கியது.

சுமார் 3,958 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட் டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்டின் பட்டி காவல் நிலையத்தில் அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT