Regional02

மதுரை ஆயுத படையில் டிஐஜி காமினி ஆய்வு :

செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆயுதப் படையில் மதுரை சரக காவல் துணைத் தலைவர் என்.காமினி வருடாந்திர ஆய்வு நடத்தினார்.

அப்போது ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் ஆயுதப் படையின் படைக்கலங்கள், காவலர்களின் பொருட்களை பார்வையிட்டு அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், ஆயுதப்படையில் உள்ள வஜ்ரா, வருண் வாகனங்களை ஆய்வு செய்தார். சிறந்த முறையில் காவல் வாகனங்களை பராமரித்து வரும் வாகன ஓட்டுநர்களுக்கு வெகுமதி வழங்கினார். எஸ்பி பாஸ்கரன், ஆயுதப்படை டிஎஸ்பி விக்னேஸ்வரன், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT