நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆட்சியர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார். 
Regional01

கூட்டுறவு வார விழா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு :

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 68-வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார்.

விழாவில், 20 விவசாயிகளுக்கு ரூ.16.46 லட்சம் மதிப்பில் பயிர்க்கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மேலும், நாமக்கல் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வக்குமரன், துணைப் பதிவாளர்கள் வ.வெங்கடாசலபதி, ஆ.சி.ரவிச்சந்திரன், பி.கர்ணன், தா.அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT