Regional02

மகாராஜகடை பகுதியில் யானைகளால் பயிர் சேதம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கர்நாடகாவில் இருந்து வெளியேறிய யானைகள் 4 நாட்களாக முகாமிட்டுள்ளன.

இவை மகாராஜகடை, காட்டூர், நந்திபள்ளி, தாசப்பன்கொட்டாய், பூங்குருத்தி, மிஷின்கொட்டாய், தேசுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் விளைநிலங்களில் பயிரிடப் பட்டுள்ள வாழை, நெல், தென்னை மரங்களை சேதப்படுத்தியும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லும் குழாய்களை உடைத்தும் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT