திருச்சி சரக சிறைத்துறை டிஐஜியாக பணிபுரிந்த கனக ராஜ், சென்னை சரகத்துக் கும், வேலூர் சரக டிஐஜியாக பணிபுரிந்த ஜெயபாரதி, திருச்சி சரகத்துக்கும் நியமிக் கப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கோவைக்கும், சேலம் மத்திய சிறையில் பணிபுரிந்த செந்தில்குமார், திருச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து திருச்சி சரக சிறைத்துறை டிஐஜியாக ஜெயபாரதியும், திருச்சி மத் திய சிறைக் கண்காணிப்பாளராக செந்தில்குமாரும் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டனர்.