Regional01

வளர்ப்பு தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி மரணம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வளர்ப்பு தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் பலத்த காயங் களுடன் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையைச் சேர்ந்த குருநாதன் மனைவி சுஜா (33). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தனர். கடந்த 8 ஆண்டுகளுக்குமுன் குருநாதன் இறந்துவிட்டார். சுஜா, தனது 3 குழந்தைகளுடன், அதே பகுதியைச் சேர்ந்த ஜேசு அந்தோனிராஜுடன் வாழ்ந்தார். கடந்த 4 மாதங்களுக்குமுன் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் அவர்கள் குடியேறினர். அங்குள்ள ஹோட்டலில் சுஜாவும், ஜேசு அந்தோனிராஜும் பணிபுரிந்தனர்.

சுஜாவின் பிள்ளைகள் அங்குள்ள பேக்கரி கடையில் பிஸ்கெட் வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் சென்றதாக, ஜேசு அந்தோனிராஜிடம் பேக்கரி உரிமையாளர் கூறியுள் ளார். ஆத்திரமடைந்த ஜேசு அந்தோனிராஜ், அங்கிருந்த 3 பிள்ளைகளையும் தாக்கி விட்டு, மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், சிறுமி மகேஸ்வரிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மற்ற இரு பிள்ளைகளும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த மகேஸ்வரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் மகேஸ்வரி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பணகுடி போலீஸார் விசாரிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT