Regional02

மீன்வளக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ரோட்டரி கிளப் சார்பில் ‘மரக்கன்று நடும் விழா’ நடந்தது. கல்லூரி முதல்வர் ந.வ.சுஜாத்குமார் வரவேற்றார். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கோ.சுகுமார் தலைமை வகித்து, மரம் நடுவதின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். ரோட்டரி கிளப் தலைவர் புளோரா ஜீவனிட்டா பேசினார். மரக்கன்றுகள் நடப்பட்டன. அனைவரும் ‘தேசிய ஒருமைப்பாட்டு தினம்’ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.முருகானந்தம் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT