பொன்னேரி வட்டத்தில் வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஒன்றியம் பொன்னேரி வட்டத் துக்கு உட்பட்ட மாரியம்மன் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வீட்டில் உள்ள பொருட்கள் சேதமடைந் துள்ளன. மழை நீர் சூழ்ந்ததால் பலர் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஜோலார்பேட்டை- வாணியம்பாடி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற ஜோலார்பேட்டை காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
ஆனால், காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
போக்குவரத்து பாதிப்பு