Regional02

ஆரணி காவல் நிலையத்தில் நடிகர் சூர்யா மீது புகார் :

செய்திப்பிரிவு

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தி உள்ளதாக கூறி நடிகர் சூர்யா உள்ளிட்டவர்கள் மீது ஆரணி நகர காவல் நிலையத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று மனு அளித்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜிடம், மாவட்ட பாமக செயலாளர் வேலாயுதம் தலைமை யிலான பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று அளித்துள்ள மனுவில், “நடிகர் சூர்யா நடித்து ஜெய்பீம் திரைப்படம் வெளி வந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜாதி பிரிவிணையை ஏற்படுத்தும் வகையில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT