TNadu

குரூப்-4 தேர்வுக்கு நவ. 25-ல் சான்றிதழ் சரிபார்ப்பு :

செய்திப்பிரிவு

குரூப்-4 பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 2019 செப். 1-ம் தேதி நடத்தப்பட்டு, மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டன. இத்தேர்வு தொடர்பான 3-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்குநவ.25-ம் தேதி காலை நடைபெறுகிறது.

இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசைபட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தை அதில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தனியே அனுப்பப்படாது என்று டிஎன்பிஎஸ்சி செயலர் பி.உமாமகேஸ்வரிநேற்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT