திருப்பூரில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம், நல்லூரை சேர்ந்த சந்திரமோகன் (32) என்பவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதையறிந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர்தெற்கு மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, சந்திரமோகனை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.
இதேபோல காங்கயம் தாலுகா வெள்ள கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் குமார் (28). இவர், அப்பகுதியில் தறி வேலை செய்து வந்துள்ளார். இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, பிரகாஷ்குமாரை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.