Regional01

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா காங்.கொண்டாட்டம் :

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாள் விழா, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. திருப்பூர்மாநகராட்சி அருகே இந்திராகாந்தியின் உருவப்படத்துக்கு, மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையிலான காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT