Regional02

பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு :

செய்திப்பிரிவு

பழங்குடியின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெற வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென நாமக்கல் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பொறியியல் பிரிவுகல்வி, தகவல் தொழில் நுட்பக் கல்வி, அனைத்து முழுநேர பட்டயப்படிப்பு, அனைத்து கப்பல்துறை கட்டுமான ஒருங்கிணைந்த படிப்புகள், நிர்வாகம் சார்ந்த முழுநேர படிப்புகள், மருத்துவம் சார்ந்த படிப்புகள், முழுநேர இதர உயர்கல்வி படிப்புகள், ஓட்டல் நிர்வாக படிப்பு, பி.எட். மற்றும் தொழில்நுட்பக் கல்வி படிப்பு பயிலும் பழங்குடியின மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் பழங்குடியின மாணவர்கள் https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம், விண்ணப்பிக்கலாம். புதிதாக கல்வி உதவித்தொகை கோரும் மாணவர்கள் மற்றும் புதுப்பிப்பவர்கள் வரும் 30-ம் தேதிக்குள் பதிவினை மேற்கொள்ள வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT