Regional02

ஈரோட்டில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிப்பு - மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர் சிறையில் அடைப்பு :

செய்திப்பிரிவு

ஈரோடு அருகே கார் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்ததே காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த குமாரவலசு என்ற இடத்தில் நேற்று முன்தினம் கார் - லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநரான, ஈரோடு காசிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டனை (41) போலீஸார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஓட்டுநர் மணிகண்டன் மதுபோதையில் இருந்ததும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், கோபி கிளை சிறையில் அடைத்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் கூராய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT