சிங்கவரம் ரங்கநாதர் குடவரைகோயிலுக்கு சாலை அமைப்பதற் காக பாறைகளை வெடிவைத்து தகர்க்கவில்லை என தமிழக அரசுஉயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளது.
இதுதொடர்பாக ரங்கத் தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்றத்தி்ல் தொடர்ந்திருந்த வழக்கில், விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியில் மலை மேல் உள்ள பாறையை குடைந்து கட்டப்பட்ட 1,500 ஆண்டு கள் பழமையான ரங்கநாதர் குடவரைக் கோயிலில், 24 அடி நீளத்தில் அனந்தசயன நிலையில் பெருமாளின் உருவம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு செல்ல120 படிகள் உள்ள நிலையில், கோயிலுக்கு சாலை அமைப்பதாக கூறி, உள்ளூர் எம்எல்ஏ- ஆதரவுடன் பாறையை வெடி வைத்து தகர்த்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கவோ, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவோ தடை விதிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2.86 கோடி செலவில் இந்த கோயிலுக்கு எளிதாக செல்ல சாலை அமைக்கப்படுகிறது. அதற் காக அங்குள்ள பாறைகளை வெடி வைத்து தகர்க்கவில்லை.
கடந்த 2018-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது பாறைகளில் சரிந்து விழுந்தது. அந்தகோயிலின் தொன்மை பாதுகாக் கப்படும்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும், என்றார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அந்த கோயிலுக்கு சாலை அமைப்பதில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத் துள்ளனர்.