Regional02

20 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் :

செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையிலும், பவுர்ணமி கிரிவலத்துக்கான தடை நீக்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி, இந்தாண்டு தொடக்கத்தில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

இந்நிலையில், கார்த்திகை மாத பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இந்தாண்டும் தடை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 2 நாட்களுக்கு தலா 20 ஆயிரம் பக்தர்கள், கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, 20 மாதங்களுக்கு பிறகு, பவுர்ணமி நாளான நேற்றிரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

SCROLL FOR NEXT