Regional02

மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வு :

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் சின்னக்கணக்கன்பட்டியில் மழையால் சேதம் அடைந்த தரைப்பாலம், கைக்குறிச்சி மற்றும் விஜயரகுநாதபுரத்தில் சேதம் அடைந்த மதகுகளை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று ஆய்வு செய்தார்.

இதேபோன்று, ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட மயிலாடிக்காடு, கூழையன்காடு, அழியா நிலை, வாண்டாக்கோட்டை, வல்லத்திராகோட்டை, இசுகுப் பட்டி, மணியம்பள்ளம், சிலட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர், சேதம் அடைந்த குடியிருப்புகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

அப்போது, மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் ராம.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT