Regional01

பள்ளியில் மரக்கன்று நடும் விழா :

செய்திப்பிரிவு

நாங்குநேரி வட்டம் ராமனேரி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பேச்சித்தாய் தலைமை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் சுப்புலெட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி உதவி ஆசிரியை பெருமாள் குமாரி வரவேற்றார். தலைமையாசிரியர் செ.பால்ராஜ் கருத்துரை வழங்கினார். பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.

SCROLL FOR NEXT