CalendarPg

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்க : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல் :

செய்திப்பிரிவு

பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிமுக அரசு வழங்கியதுபோல ரூ.2,500 நிதியுடன் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 2020-ம் ஆண்டில் ரூ.1,000, 2021-ல் ரூ.2,500 நிதியுதவியுடன் கூடிய பரிசுத் தொகுப்பை அதிமுக அரசு வழங்கியது. இந்நிலையில், வெறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வேலையின்றித் தவிக்கும் சூழலில், பொங்கலுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த ரூ.2,500 நிதியைத் தொடர்ந்து அளிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT