மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதற்காக ரூ.10 கோடியில் 10 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட, செவித் திறன், பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. அதேபோல,இந்த ஆண்டு வழங்க ரூ.10 கோடியில் 10 ஆயிரம் ஸ்மார்ட்போன்களை கொள்முதல் செய்ய மாற்றுத் திறனாளிகள் நலத் துறை டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் வரும் 22-ம் தேதிமாலை இறுதிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.