உதகை பழங்குடியினர்‌ அராய்ச்சி மையத்தில் நடந்த ஓவியப்போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவர்கள். 
Regional02

பிர்சா முண்டா பிறந்தநாள் - பழங்குடியின மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் :

செய்திப்பிரிவு

பிர்சா முண்டாவின்‌ பிறந்த நாளை முன்னிட்டு 15-ம் தேதி முதல்‌ 22-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதையொட்டி உதகை, பழங்குடியினர்‌ ஆய்வு மையத்தின்‌ சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.‌ உதகை பழங்குடியினர்‌ ஆராய்ச்சி மைய இயக்குநர்‌ முனைவர்‌ ச.உதயகுமார்‌ தலைமையில்‌ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பழங்குடியின இளைஞர்கள்‌ மற்றும்‌ ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள்‌ என 64 மாணவர்கள் ஆர்வத்துடனும்‌, கலந்துகொண்டு தங்களது ஓவியத்‌ திறனை வெளிப்படுத்தினர். ஓவியப்‌ போட்டியில்‌ திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய கோத்தர், முள்ளு குரும்பர்‌, இருளர்‌ இன பழங்குடியின மாணவர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நிகழ்ச்சியில்‌ பங்கேற்றதற்காக சான்றிதழ்‌ வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்‌.

SCROLL FOR NEXT