Regional02

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : விருப்பமனு பெற திருப்பூர் திமுக அழைப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல. பத்மநாபன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, திருப்பூர் கிழக்கு, வடக்கு மாவட்ட கழகத்துக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சியின் 10 வார்டுகளுக்கு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை (நவ. 20) காலை 10 மணி முதல் 22-ம் தேதி மாலை 5மணி வரை, திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் மனுவை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT