மலர்சாந்தி 
Regional02

கோவை அரசு பெண் மருத்துவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

கரூர் அருகே நேற்று கிணற்றில் தவறி விழுந்த கோவையைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் மலர்சாந்தி(48). திருமணமான இவருக்கு குழந்தை இல்லாத நிலையில், கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் மாயனூர் அருகேயுள்ள எழுதியாம்பட்டியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் மலர்சாந்தி வந்திருந்தார். அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT