Regional02

அடையாறு ஆற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேறுகிறது :

செய்திப்பிரிவு

அடையார் ஆற்றுக்கு வரும் உபரிநீர் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அடையாறு ஆற்றைச் சுற்றியுள்ள 127 ஏரிகளும் நிரம்பி விட்டதால் அனைத்து தண்ணீரும் அடையாற்றில் வந்து சேருகிறது. தொடர்ந்து மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சி, செங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘எதற்கும் தயார் நிலையில் இருக்கிறோம்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT