சாத்தியார் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர் பி.மூர்த்தி. 
Regional01

சாத்தியார் அணை திறப்பு : 1,500 ஏக்கர் பாசன வசதி பெறும்

செய்திப்பிரிவு

பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மழையால் நிரம்பி யது. இந்நிலையில் நேற்று காலை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், வெங்கடேசன் எம்எல்ஏ, வாடிப்பட்டி வட் டாட்சியர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் 11 கண்மாய்கள் நிரப்பப்படும். கண்மாய்கள் மூலம் 1,500 ஏக்கர் பாசன வசதி பெறும்.

SCROLL FOR NEXT