Regional01

பழையபாளையம் ஏரிக்கரையில் மண் சரிவு : கனரக வாகனப் போக்குவரத்துக்கு தடை

செய்திப்பிரிவு

பழையபாளையம் ஏரிக்கரை சாலையில் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து அச்சாலையில் வாகனப் போக்குவரத்தை காவல் துறையினர் தடை செய்துள்ளனர்.

சேந்தமங்கலம் அருகே கொல்லிமலை அடிவாரத்தில் பழையபாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஏரி கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்னர் முழுக் கொள்ளளவையும் எட்டியுள்ளது. மேலும், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏரிக்கரை சாலையின் ஒரு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சேந்தமங்கலம் நெடுஞ்சாலைத் துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி ஏரிக்கரை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்து காவல் துறையினர் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதனால் ஏரிக்கரை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையான சேந்தமங்கலம் வேட்டாம்பாடி மற்றும் நாமக்கல் அண்ணாநகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT