பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன் மகன் மணி(75). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவனிக்க யாரும் இல்லாத நிலையில், செட்டிக்குளம் வெங்காய குடோன் அருகே தங்கியிருந்தார். இவருக்கும், அதே பகுதியில் தள்ளுவண்டியில் சிக்கன் கடை நடத்தி வரும் தர்மலிங்கம் மகன் நாகப்பன்(45) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மணியை நாகப்பன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், மணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணியை கைது செய்தனர்.