தஞ்சாவூர்: தமிழக தொல்லியல்துறை தஞ்சாவூர் மாவட்ட அலுவலர் த.தங்கதுரை தெரிவித்துள்ளது: தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், இன்று (நவ.19) முதல் நவ.25-ம் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால், மாணவ, மாணவிகளுக்கு தொல்பொருள் மற்றும் மரபு சின்னங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மனோரா நினைவு சின்னம், தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபத்தில் உள்ள அகழ்வைப்பகம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மராட்டா அகழ்வைப்பகம், மராட்டா தர்பார் மண்டபம், மணிக்கோபுரம் ஆகிய இடங்களை இன்று (நவ.19) முதல் நவ. 25-ம் தேதி வரை ஒருவார காலத்துக்கு மாணவ, மாணவிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.