Regional02

30 டன் தாமிரக் கழிவு திருடிய 3 பேர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (36), ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் துறைமுக புறவழிச் சாலையில் தனக்கு சொந்தமான கிட்டங்கியில் தாமிரக் கழிவுகளை சேமித்து வைத்துள்ளார். அங்கிருந்து 30 டன் எடையுள்ளதாமிரக் கழிவுகளை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ராகேஷ் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, தூத்துக்குடி தெர்மல்நகரைச் சேர்ந்த மாரிமுத்து (31), 3-ம் மைல் பகுதியைச் சேர்ந்தசங்கரநாராயணன் (37), தென்காசி மாவட்டம் வீரசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தக்காரி பீர்முகமது (35) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள 30 டன்தாமிரக் கழிவுகளை பறிமுதல்செய்தனர். இது தொடர்பாகதூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த செல்வகுமார், நவஜீவன் நகரைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT