Regional02

தூத்துக்குடியில் மளிகைக் கடை, ஹோட்டல் மூடல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமனஅலுவலர் ச.மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல்படி தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட உணவு வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அப்பகுதியில் உள்ள ஒரு தேனீர் கடை, பழக்கடை, மளிகைக்கடை மற்றும் புரோட்டா கடை ஆகிய உணவு வணிக நிறுவனங்கள் காலாவதியான உணவுபாதுகாப்பு உரிமத்து டன் இயங்கியதால், உடனடியாக மூடப்பட்டன.

SCROLL FOR NEXT