சட்டப் பல்கலைக்கழக செமஸ்டர்தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: கரோனா தொற்று காரணமாக 2019 முதல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் 3 செமஸ்டர் தேர்வுகளையும் இணையவழியில் நடத்தியது.
இந்நிலையில், தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்து வகுப்புகளும் தற்போது நேரடி வகுப்புகளாகவே நடத்தப்பட்டு வருகின்றன. சட்டக்கல்வியின் தரத்தைப் பேணும்வகையில் இனிசெமஸ்டர் தேர்வுகள், நேரடி தேர்வாக மட்டுமே நடத்தப்படும்.
பல்கலைக்கழக சீர்மிகு சிறப்புசட்டக் கல்லூரி உட்பட பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம்பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடத்தப்படும். வரும் டிச.20-ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பொறியியல் தேர்வு