Regional01

கொளத்தூர் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் : அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு வழங்கினர்

செய்திப்பிரிவு

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுமற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் பல்வேறு அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதியில் நிவாரணப் பொருட்களை வழங்க , பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர்கள் இருவரும் அனைத்து வார்டுகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதன்படி இத்தொகுதியைச் சேர்ந்த 5,000 குடும்பங்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட 12 நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT