Regional01

அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ ஆஜர் :

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் பழனிசாமியை அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தமிழக அரசையும், அப்போதையை முதல்வர் பழனிசாமியையும் அவதூறாக பேசியதாக அப்போதைய அரசு வழக்கறிஞர் சீனிவாசன் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆஜரானார்.

இதையடுத்து இவ்வழக்கை வருகிற 3-ம் தேதிக்கு நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT