எலவனாசூர்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்த மழைநீர். 
Regional02

எலவனாசூர்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழ்ந்த மழை நீர் :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்து நிற்பதால், பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் உளுந்தூர்பேட்டை வட்டம் எல வனாசூர்கோட்டையில் பெய்த கனமழையால், வடிகால் வாய்க் கால்கள் தூர்ந்து போனதால் மழைநீர் வெளியேற வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகியினர். மின்வாரிய அலுவலக சந்திப்பு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகனங்கள் அதில் சிக்கி, பழுதாகி நிற்கும் நிலை உள்ளது.

அதேபோன்று பத்திரப் பதிவுஅலுவலகத்தை ஒட்டிய வடிகால்தூர்ந்து போனதாலும், மழைநீர் வெளியேற வழியின்றி பத்திரப்பதிவு அலுவலகத்தை சூழந்துள் ளது.

இதனால் பத்திரப் பதிவுக்குவரும் பயனாளிகள் அலுவலகத்தி னுள் செல்ல முடியாமல் அவ திக்கு ஆளாகின்றனர். மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT