Regional01

மரக்கிளை விழுந்து இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (23). இவர், அப்பகுதியில் நேற்று மரம் வெட்டினார். அப்போது வெட்டிய மரக்கி ளைகள் அவர் மீது விழுந்ததில் படுகாயமடைந்த அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அண் ணாநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் மரணம்

மதுரை கரிமேடு அழகரடி தெருவைச் சேர்ந்தவர் பால கங்கா தர திலகர் (60). எலக்ட்ரீசியனாக பணிபுரிந்தார். கரிமேடு கிறி ஸ்து சர்ச் தெருவிலுள்ள தே வாலயத்தில் மின்விளக்கை பொருத்துவதற்காக நேற்று ஏணியில் ஏறினார். அப்போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து கரிமேடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT