Regional02

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக பாஜக குழு அமைப்பு :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக மாவட்ட பாஜகவில் தேர்தல் தொடர்பான பணிகளை முன்னின்று செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குழுவில் மேலிட பார்வையாளர்கள் பேட்டை சிவா, சி.எஸ்.கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வி.கே.செல்வம், டி.ஆர்.துரையரசு, மாவட்டச் செயலாளர் மணிமே கலை, பொருளாளர் ஆர்.சிவக் குமார், துணைத் தலைவர் கள் சி.செந்தில்அரசன், ரங்கதாஸ் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர் என மாவட்ட பாஜக தலைவர் கோட்டூர் ராகவன் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT