Regional02

28,400 லிட்டர் டீசல் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் மீன்பிடி படகுகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு சட்ட விரோதமாக டீசல் விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இப் பிரிவு மதுரை டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் தூத்துக்குடி ஆய்வாளர் தில்லை நாகராஜன் தலைமையில் போலீஸார் மடத்தூர்- சோரீஸ்புரம் சாலையில் உள்ள குடோனில் சோதனை நடத்தினர்.

அங்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது. சரக்கு ஆட்டோவில் டிரம்களில் 400 லிட்டர் டீசல் இருந்தது. சட்ட விரோதமாக பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றதாக கூறி 28,400 லிட்டர் டீசல் மற்றும் டேங்கர் லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT