Regional01

தமிழக அரசின் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற - திருப்பத்தூர் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு :

செய்திப்பிரிவு

விவசாயிகளின் வாழ்வை வளமாக்க தமிழக அரசின் "புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில்" பயன்பெற விவ சாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மேலும் ஒரு சிறப்பம் சமாக விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும், வேலைவாய்ப்பு கிடைக்க தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற ‘புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம்’ 2021-2022-ன் கீழ் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டுமென வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய நிலங்களின் வரப்புகளிலும், குறைந்த பரப்பளவில் விவசாய நிலத்திலும் மரக்கன்று சாகுபடியை ஊக்குவிக்க வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலைவேம்பு, செம்மரம், வேங்கை மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல் வேறு வகையான 1 லட்சத்து 89 ஆயிரத்து 600 தரமான மரக் கன்றுகள் வனத்துறை சார்பில் அரசு நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தயாராக உள்ளன.

எனவே, விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலின் மூலமாகவோ பதிவு செய்து வேளாண்மைத்துறையின் பரிந்துரைப்படி தேவையான மரக்கன்றுகளை அருகிலுள்ள தமிழ் நாடு வனத்துறை நாற்றாங்காலில் இலவசமாக பெற்றுக் கொள்ள லாம்.

மரக்கன்றுகள் விநியோகம் "வரப்பு நடவு முறை" எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலத்தில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமல் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரித்திட 2 ஆண்டு முதல் 4 ஆண்டுகள் வரை உயிருடன் உள்ள மரக் கன்றுகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.

ஒரு மரக்கன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டு களுக்கு ரூ.21 வழங்கப்படும். நடப்பட்ட மரக்கன்றுகளை வரு வாய்த்துறையின் அடங்கல் பதி வேட்டில் பதிவு செய்யப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேரலாம்.

சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கு முன்னுரிமை வழங் கப்படும்.

இந்த திட்டத்தினால் எதிர்வரும் காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங் களின் மண் வளமும் அதிகரிப் பதோடு மாவட்டத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படும்.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT